முக்கனிகளுள் ஒன்றான வாழைப்பழம் உடலின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்கின்றது. மூலத்தால் கசியும் குருதிப்போக்கு, வயிற்றுக் கோளாறு, இருமல், சிறுநீர் ஒழுக்கு, கோழைச் சுரப்பு அதிகரித்தல், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவற்றை வாழைக்காய் குணமாக்குகிறது.
ஒரு வாழைப்பழத்தில் (100 – 150 கிராம்) 100 கலோரிகளே உள்ளதால் எடை அதிகரிக்காது.
செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைய ஆரம்பிக்கும். திருமணமாகி பல ஆண்டுகளாகியும் கர்ப்பமே தரிக்கவில்லை என்று மனம் வருந்தி கொண்டிருக்கும் தம்பதியர்கள் செவ்வாழை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர் சக்தி அணுக்கள் போதுமான அளவில் பெருகி கருத்தரிக்க வாய்ப்பாகும்.
சமிபாட்டுக் குறை (அஜீரணம்), மூலநோய்: தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு பழம் வீதம் பாலுடன் சாப்பிட்டு வந்தால் உணவு நன்கு சமிபாடு அடையும் மூலமும் குணமாகும். அரை கப் தயிரில் வாழைப்பழத்தைப் பிசைந்து ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தம்ளர் இளநீர் சேர்த்துத் தினமும் இரண்டு வேளை வீதம் சாப்பிட்டு வந்தால் சரியாகும்.
இருமல்: கரு மிளகு கால் தேக்கரண்டி எடுத்துப் பொடி செய்து, அதில் பழுத்த நேந்திரம் பழத்தைக் கலந்து இரண்டு, மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.
சிறுநீரக நோய்கள்: நெல்லிச்சாறு அரைக் கரண்டியுடன் பழுத்த வாழைப் பழத்தைக் கலந்து 2, 3 வேளை சாப்பிட்டு வந்தால் இந்தக் குறைபாடு நீங்கும்.
குருதிச்சோகை: இரும்புச் சத்து இருப்பதால் ஈமொகுளோபினின் உற்பத்தியைக் கூட்டி குருதிச்சோகை வராமல் தடுக்கவல்லது.
உயர் குருதி அழுத்தம்: பொட்டாசியம் அதிகளவில் உள்ள, உப்புக் குறைவாக உள்ள பழமாதலால், உயர் குருதி அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றது.
மன அழுத்தம், மனச்சோர்வு: இதில் காணப்படும் ட்ரிப்டோபான் எனும் அமினோவமிலம் உடலில் செரடோனின் ஆக மாற்றப்படுகின்றது. இதைவிட இம்மாற்றத்துக்கு இதில் காணப்படும் உயிர்ச்சத்து பி6 முக்கிய பங்கை வகிக்கின்றது. செரடோனின் மனத்தை உற்சாகமாக வைத்திருக்க உதவுகின்றது. மனதில் ஏற்படும் பயம், கவலை, வருத்தம் முதலியவற்றை நீக்கவும் செரோடினின் பெரிதும் உதவுகிறது.
புற்றுநோய்: கழலை நசிவுக்காரணி (Tumor Necrosis Factor ; TNF) என்பது உடலில் தேவையற்ற உயிரணுக்களைக் கட்டுப்படுத்தும் ஒரு காரணியாகும், இவை புற்றுநோய்க்கலங்களை வளரவிடாமல் செய்கின்றது. நன்கு கனிந்த வாழைப்பழத்தில் இக்காரணி உண்டு என அறியப்பட்டுள்ளது. இதைவிட வாழைப்பழத்தில் எதிர் ஒட்சியேற்றுத் தன்மை உள்ளது, இதனாலும் புற்றுநோய்கள், இதயநோய்கள் கட்டுப்படுத்தப்படலாம்.
நெஞ்செரிவு: அமிலத்தன்மையால் ஏற்படும் நெஞ்செரிவைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு அமிலவெதிரியாக தொழிற்படுகின்றது.
வாழை (தோல் நீங்கியது)
100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து ஆற்றல் 90 kcal 370 kJ
மாப்பொருள் | 22.84 g |
– சர்க்கரை 12.23 g | |
– நார்ப்பொருள் 2.6 g | |
கொழுப்பு | 0.33 g |
புரதம் | 1.09 g |
உயிர்ச்சத்து ஏ 3 μg | 0% |
தயமின் 0.031 mg | 2% |
ரிபோஃபிளாவின் 0.073 mg | 5% |
நியாசின் 0.665 mg | 4% |
பான்டோதெனிக் அமிலம் 0.334 mg | 7% |
உயிர்ச்சத்து பி6 0.367 mg | 28% |
இலைக்காடி (உயிர்ச்சத்து பி9) 20 μg | 5% |
உயிர்ச்சத்து சி 8.7 mg | 15% |
கால்சியம் 5 mg | 1% |
இரும்பு 0.26 mg | 2% |
மக்னீசியம் 27 mg | 7% |
பொசுபரசு 22 mg | 3% |
பொட்டாசியம் 358 mg | 8% |
துத்தநாகம் 0.15 mg | 2% |
உசாத்துணைகள்