கண்ணில் முதலில் பக்கமாக வெள்ளையாகத் தெரிவது வெண்விழிப்படலம். நடுவில் உள்ளது, ஆனால் காணமுடியாதது (ஒளியூடுருவி என்பதால்) கருவிழிப்படலம். கருவிழிப்படலத்தின் பின்னால் உள்ளது கதிராளி, கதிராளியின் மையத்தில் வட்ட வடிவமான சுருங்கி விரியக்கூடிய துவாரம் உள்ளது, இதுவே கண்மணி எனப்படும். கண்மணியின், கதிராளியின் பின்னே காணப்படுவது வில்லை ஆகும்.
cornea: கருவிழிப்படலம்
sclera: வெண்விழிப்படலம் / விழிவெண்படலம்
கருவிழிப்படல விழிவெண்படலக் குறைபாடுகள் பற்றி இங்கே படிக்கலாம்.