உயிர்ச்சத்து என்பது பெரும்பாலான உயிரினங்களின் இயல்பான வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் மிகச்சிறிய அளவில் தேவைப்படும் இன்றியமையாதகரிம நுண்ணூட்டச் சத்து ஆகும். உயிரினத்தால் உருவாக்கப்பட முடியாத அல்லது ஒரு சிறுபகுதி
மாத்திரமேஉருவாக்கப்படக் கூடிய கரிமச் சேர்மங்களேஉயிர்ச்சத்துக்களாகக் கருதப்படுகிறது, இவற்றின் தேவை உண்ணும் உணவு மூலம் மட்டுமே பூர்த்தி செய்யப்படுகிறது, எனினும் இவற்றை விட அதிகமான அளவில் உயிரினத்திற்குத் தேவைப்படும் அசேதன சேர்மங்களான கனிமங்கள், கொழுப்பமிலங்கள், முக்கிய அமினோ அமிலங்கள் இவற்றுள் அடங்குவதில்லை.
ஒரு குறிப்பிட்ட உயிரினத்துக்கு உயிர்ச்சத்தாகக் கருதப்பட்டாலும் வேறு உயிரினங்களுக்கு அவை உயிர்ச்சத்தாக அமையாமல் இருக்கலாம்; உதாரணமாக, மனிதனுக்குத் தேவைப்படும் அசுகொர்பிக் அமிலம் (உயிர்ச்சத்து C) வேறு உயிரினங்களால் முழுமையாக உருவாக்கப்படுகின்றபடியால் அவற்றிற்கு உயிர்ச்சத்தாகக் கருதப்படுவதில்லை.
சில உயிர்ச்சத்துகளை சிறிய அளவில் உயிரினம் உற்பத்தி செய்ய இயலும்: உயிர்ச்சத்து A-யைபீட்டா கரோட்டினில்இருந்தும், நியாசினைடிரிப்டோபான்என்னும்அமினோ அமிலத்தில்இருந்தும், உயிர்ச்சத்து D-யை தோலைபுற ஊதாஒளிக்கு உட்படுத்துவதின் மூலமும் உற்பத்தி செய்ய இயலும்; இருப்பினும், இவற்றின் போதுமான அளவிற்கு நல்லசத்துள்ள உணவு உட்கொள்ளுதல் அவசியம் ஆகும். பதின்மூன்று உயிர்ச்சத்துக்கள் இதுவரை உலகளாவியரீதியில் அறியப்பட்டுள்ளது.
விற்றமின் (Vitamin) என்னும் ஆங்கிலச்சொல்லானது இலத்தின் சொல்லான vita (உயிர்) + amine (அமைன்) போன்றவற்றின் சேர்க்கையால் உருவானது. நைதரசன் கொண்ட மூலக்கூறுகளே அமைன் என அழைக்கப்படுகிறது. அமைன் எனப்படும் பதம் பின்பு தவறானது எனத் தெரியவந்ததால் ஆங்கில “vitamine” என்னும் சொல் பின்னர் “vitamin” எனக் குறுக்கப்பட்டது.