கருவிழிப்படல விழிவெண்படலக் குறைபாடுகள்
கண்ணில் முதலில் பக்கமாக வெள்ளையாகத் தெரிவது வெண்விழிப்படலம். நடுவில் உள்ளது, ஆனால் காணமுடியாதது (ஒளியூடுருவி என்பதால்) கருவிழிப்படலம். கருவிழிப்படலத்தின் பின்னால் உள்ளது கதிராளி, கதிராளியின் மையத்தில் வட்ட வடிவமான சுருங்கி விரியக்கூடிய துவாரம் உள்ளது, இதுவே கண்மணி எனப்படும். கண்மணியின், கதிராளியின் பின்னே காணப்படுவது வில்லை ஆகும். cornea: கருவிழிப்படலம் sclera: வெண்விழிப்படலம் / விழிவெண்படலம் கருவிழிப்படல விழிவெண்படலக் குறைபாடுகள் பற்றி இங்கே படிக்கலாம்.
பார்வையின்மை
உயிர்ச்சத்து
உயிர்ச்சத்து என்பது பெரும்பாலான உயிரினங்களின் இயல்பான வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் மிகச்சிறிய அளவில் தேவைப்படும் இன்றியமையாதகரிம நுண்ணூட்டச் சத்து ஆகும். உயிரினத்தால் உருவாக்கப்பட முடியாத அல்லது ஒரு சிறுபகுதி மாத்திரமேஉருவாக்கப்படக் கூடிய கரிமச் சேர்மங்களேஉயிர்ச்சத்துக்களாகக் கருதப்படுகிறது, இவற்றின் தேவை உண்ணும் உணவு மூலம் மட்டுமே பூர்த்தி செய்யப்படுகிறது, எனினும் இவற்றை விட அதிகமான அளவில் உயிரினத்திற்குத் தேவைப்படும் அசேதன சேர்மங்களான கனிமங்கள், கொழுப்பமிலங்கள், முக்கிய அமினோ அமிலங்கள் இவற்றுள் அடங்குவதில்லை. ஒரு குறிப்பிட்ட உயிரினத்துக்கு உயிர்ச்சத்தாகக் கருதப்பட்டாலும் வேறு […]
தூக்கத்தில் நடத்தல்
தூக்கத்தில் நடத்தல் அல்லது துயில் நடை (sleepwalking ; ( சொம்னாம்புலிசம்) somnambulism) என்பது ஒருவகை தூக்க நோயாகும், இது பரசொம்னியா (parasomnia) எனப்படும் தூக்கத்தில் நிகழும் செயல்கள் கொண்ட பகுப்பில் அடங்குகின்றது. இது தூக்கத்தின் படிநிலைகளில் ஒன்றான மந்த அலை உறக்கநிலையில் (slow wave sleep) நிகழும். தூக்கத்தில் நிகழும் இச்செயன்முறைகள் படுக்கையில் இருத்தல், படுக்கை அருகே நடத்தல், குளியலறை நோக்கி நடத்தல், சுத்தம் செய்தல் போன்ற தீங்கில்லாத செயற்பாடுகளாக இருக்கலாம் அல்லது உயிராபத்தை உண்டாக்க […]
உயிர்வேதியியல்
உயிர்வேதியியல் (Biochemistry) அல்லது உயிரிய வேதியியல் என்பது வாழும் உயிரினங்களுள் நிகழும் வேதியியற் செயல் முறைகள் பற்றிய கல்வி ஆகும்.உயிர் அறிவியலின் கிளையான உயிர் வேதியியல், உயிரணுக்கள் மற்றும் உயிரினங்களில் நடைபெறும் வேதிவினைகள் பற்றிய நுண் ஆய்வாகும். உயிர்வேதியியல், உயிரணுவின் கூறுகளான புரதங்கள், காபோவைதரேட்டுகள், கொழுமியங்கள், நியூக்கிளிக் அமிலங்கள், பிற உயிர்மூலக்கூறுகள் போன்றவற்றின் அமைப்பு, அவற்றின் செயல்பாடுகள், அவற்றிற்கிடையே நிகழும் வினைகள் போன்றவற்றை விளக்குகின்றது. பெரும் எண்ணிக்கையில் வெவ்வேறான உயிர்மூலக்கூறுகள் இருப்பினும், இவற்றுட் பெரும்பாலானவை சிக்கலானவை ஆகவும், […]
முதலுதவி
முதலுதவி என்பது காயப்பட்ட அல்லது திடீர் நோய்வாய்ப்பட்ட ஒருவருக்கு தக்க வைத்திய உதவி கிடைக்கும் வரை சுற்றுச் சூழலில் கிடைத்தவற்றைப் பயன்படுத்தி உரிய முறையை உபயோகித்து உயிரைக் காப்பதற்கென வழங்கப்படும் அவசர உடனடி உதவி ஆகும், முதலுதவி வழங்குபவர் மருத்துவர் அல்லாதவராகவோ அல்லது மருத்துவராகவோ இருக்கலாம். தகுந்த முதலுதவி கொடுக்கப்படாத காரணத்தாலும் அறியாமையினால் பிழையான முதல் உதவி வழங்கப்படுதலாலும் பற்பல உயிர்கள் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படுகின்றன, இவற்றைத் தடுக்கும் பொருட்டு அனைத்து மாந்தர்களும் முறையான பிழையற்ற முதலுதவி தெரிந்திருத்தல் […]
மனித மண்டையோடு
உணவுக்குழாய் நோய்கள்
உணவுக்குழாய் நோய்கள் எனப்படுவது உணவுக்குழாயில் ஏற்படக்கூடிய நோய்களைக் குறிப்பதாகும். உணவுக்குழாய் ஒரு தசையாலான குழாய் போன்ற அமைப்பு, இது வாயில் இருந்து இரைப்பைக்கு உணவைச் செலுத்துவதில் உதவுகின்றது. கட்டமைப்புக் குறைபாடுகள், இயக்கக் கோளாறுகள், அழற்சிக் குறைபாடுகள், புற்றுநோய்கள் உட்பட்ட புத்திழையப் பெருக்கங்கள் என உணவுக்குழாயில் ஏற்படும் குறைபாடுகளை நான்கு விதமாக வகுக்கலாம். இவை பிறப்பில் இருந்து உருவாகலாம், அல்லது பின்னர் வாழ்வில் பெற்றுக்கொள்ளலாம். பலர் அமிலத்தன்மை காரணமாக அவ்வப்போது தங்கள் மார்பில் எரிச்சல் உணர்வு அனுபவிக்கின்றனர், இந்த […]
உடற்கூற்றியல் பிறழ்வுகள்
முளைய விருத்தியில் உள்ளுறுப்புகள் அசாதரணமாக உருவாகுவதைப் பற்றியும் அவ்வுறுப்புகள் அமையவேண்டிய இடத்தில் காணப்படாமல் வேறு இடத்தில் இடம் மாறி இருப்பதையும் இங்கு அறியலாம்.
இதய அடைப்பிதழ் நோய்கள்
இதய அடைப்பிதழ் நோய் (Valvular heart disease) என்பது இதயத்தின் அடைப்பிதழ்களில் ஏற்படும் குறைபாடுகளால் உண்டாகும் நோயாகும். இதய அடைப்பிதழ்க் குறைபாடுகள் பிறவிக்குறைபாடாகவோ அல்லது பிறப்பின் பின்னர் பெற்றதாகவோ இருக்கலாம். நோயின் தீவிரத்தைப் பொறுத்து மருந்துகள் மூலமாகவோ அல்லது திருத்தல் அறுவைச்சிகிச்சை அல்லது அடைப்பிதழ் மாற்று அறுவைச்சிகிச்சை மூலமாகவோ சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.