இசுடீரோய்டு அற்ற அழற்சிக்கு எதிரான மருந்துகள் ( NSAID)
வலியைப் போக்கும், காய்ச்சலைக் குறைக்கும், அதிகமான அளவுகளில் அழற்சியைக் கட்டுப்படுத்தும் இசுடீரோய்டுக்குரிய மூலக்கூறுகளைக் கொண்டிராத மாத்திரைகள் இசுடீரோய்டு அல்லாத அழற்சிக்கு எதிரான மருந்துகள் (Nonsteroidal anti-inflammatory drugs – NSAID) என அழைக்கப்படுகிறது. இந்த மருந்துக் குழுவில் மிகவும் பிரபலமாக அசுப்பிரின், இபுப்புரொஃபன் (ibuprofen), நப்ரோக்சென் (naproxen) போன்றவை விளங்குகின்றன.