Shaping Future Doctors, Knowledge for Medical Excellence

தனிமங்களின் ஆவர்த்தனப் பண்புகள்

Ranula

ஆவர்த்தன அட்டவணையில் தனிமங்களின் சில குறிப்பிட்ட பண்புகளானது கூட்டத்தின் (தொகுதி) வழியே அல்லது ஆவர்த்தனத்தின் வழியே குறைவடைந்தோ அல்லது கூடியோ காணப்படுகின்றது.  இந்த வேறுபடும் இயல்பு ஆவர்த்தனப் போக்குகள் எனப்படும் (Periodic Trends). இப்பண்புகளுள் முதன்மையானவை: அணு ஆரம் (அணுவாரை) (Atomic Radius) அயனியாக்க ஆற்றல் (அயனாக்கற்சக்தி) (Ionization Energy) இலத்திரன் நாட்டம் (electron affinity) இலத்திரன் கவர்திறன் அல்லது மின்னெதிர்த்தன்மை (Electronegativity) உருகுநிலை, கொதிநிலை உலோகத் தன்மை அனைத்து ஆவர்த்தனப் போக்குகளும் கூலும் விதியின் படி […]

தனிம வகைப்படுத்தல் – ஆவர்த்தன அட்டவணை

தனிமங்களின் (மூலகங்களின்) பண்புகளை வெவ்வேறு தொகுதிகளாக இலகுவில் அறிந்துகொள்ள அட்டவணைப்படுத்தல் அவசியமாகின்றது. இது தனிம வரிசை அட்டவணை அல்லது ஆவர்த்தன அட்டவணை எனப்படுகின்றது. தொடக்கத்தில் தனிமங்கள் அவற்றின் அணு நிறையின் (தொடர்பணுத்திணிவு) அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டன. பெரும்பான்மையான வேதியியல் வல்லுனர்கள் தனிமங்களை வகைப்படுத்தி அவற்றின் பண்புகளை ஆராய்ந்தனர்.

வேதியியல் விதிகள்

18ஆம் நூற்றாண்டின் இறுதியில் இரண்டு வேதியியல் விதிகள் சொல்லப்பட்டன. 1789 இல் அன்ரனி லாவோசியர் (Antoine Lavoisier) திணிவுக் காப்பு விதியை (law of conservation of mass) வழிமொழிந்தார், இதன்படி வேதியியல் தாக்கங்களில் பங்குகொள்ளும் தாக்கிகளின் மொத்த திணிவானது தாக்கத்தின் போது கிடைக்கும் விளைவுகளின் மொத்த திணிவுக்கு சமனாகக் காணப்படும். ஜோசெப் லூயிஸ் புரௌஸ்ட் (Joseph Louis Proust ) என்பவரால் திட்டவிகிதசமவிதி அல்லது மாறாவிகிதசமவிதி (Law of definite proportions / law of […]