இதய அடைப்பிதழ் நோய்கள்
இதய அடைப்பிதழ் நோய் (Valvular heart disease) என்பது இதயத்தின் அடைப்பிதழ்களில் ஏற்படும் குறைபாடுகளால் உண்டாகும் நோயாகும். இதய அடைப்பிதழ்க் குறைபாடுகள் பிறவிக்குறைபாடாகவோ அல்லது பிறப்பின் பின்னர் பெற்றதாகவோ இருக்கலாம். நோயின் தீவிரத்தைப் பொறுத்து மருந்துகள் மூலமாகவோ அல்லது திருத்தல் அறுவைச்சிகிச்சை அல்லது அடைப்பிதழ் மாற்று அறுவைச்சிகிச்சை மூலமாகவோ சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
இதயநோயியல்
இதயநோயியல் (cardiology) என்பது மருத்துவத்தின் ஒரு பிரிவாகும். இதய பிறவிக்கோளாறு, முடியுருநாடி நோய்கள், இதயச்செயலிழப்பு, இதய அடைப்பிதழ் நோய்கள், இதய மின்உடலியங்கியல் போன்ற இதயம் தொடர்பான கல்வியறிவும் பயிற்சியும் இப்பிரிவின் கீழ் வழங்கப்படுகின்றது. இப்பிரிவில் சிறப்புப் பயிற்சிபெற்ற மருத்துவர் இதயவியலாளர் (cardiologist) என அழைக்கப்படுகின்றார். இதயவியலாளர் அல்லது இதய நோய் நிபுணர் இதயம் தொடர்பான நோய்களுக்கு அறுவை இன்றிய சிகிச்சை அளிப்பவர் ஆவார். மார்பெலும்பை வெட்டி இதயத்தில் அறுவைச்சிகிச்சை மேற்கொள்வோர் இதய அறுவைச்சிகிச்சை நிபுணர் எனப்படுவர்.