மனிதர்களுக்கு அத்தியாவசியமான 13 உயிர்ச்சத்துக்கள் இதுவரை அறியப்பட்டுள்ளது, இவற்றுள் நான்கு கொழுப்பில் கரைபவை (ஏ, டி, ஈ, கே); ஒன்பது நீரில் கரைபவை (எட்டு வகை ‘பி’ உயிர்ச்சத்துகளும் உயிர்ச்சத்து ‘சி’யும் ). நீரில் கரையும் உயிர்ச்சத்துக்களில் பெரும்பாலானவை உடலில் சேமிக்கப்படுவதில்லை; அளவுக்கு அதிகமானவை உடலில் இருந்து சிறுநீர் மூலம் அகற்றப்படுகின்றன, எனவே இவற்றின் தேவை மாந்த உடலிற்கு நாளாந்தமாகிறது. கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துக்கள் குடலில் இருந்து கொழுப்புகளின் உதவியுடன் அகத்துறிஞ்சப்படுகிறது, அவை உடலில் சேமிக்கப்படுவதால் அதிகூடிய அளவில் எடுப்பது ஆபத்தை உண்டாக்கும், இந்த நிலைமை மிகையுயிர்ச்சத்து (hypervitaminosis) என அழைக்கப்படுகிறது.
உயிர்ச்சத்து அட்டவணை
உயிர்ச்சத்தின் பெயர் | உயிர்ச்சத்தின் வேதியியற்பெயர் (உயிர்ச்சத்து சமகூறுக்கள்) | காணப்படும் உணவு வகைகள் சில | குறைபாடு உண்டாக்கக்கூடிய அளவு | குறைபாட்டினால் ஏற்படும் விளைவு | குறைபாட்டை உண்டாக்கக் கூடிய பிற காரணிகள் | அளவு மிகைப்பு எல்லை | அளவு மிகைப்பால் ஏற்படும் விளைவு |
---|---|---|---|---|---|---|---|
உயிர்ச்சத்து A | இரெட்டினோல், இரெட்டினல், கரோட்டினொய்ட்சு (நான்கு வகை) | கல்லீரல், பால், பாற்கட்டி, மீன் எண்ணெய் | <300 µg/நாள் | மாலைக்கண், உலர் கண் | கொழுப்பு அகத்துறிஞ்சாமை, தொற்றுநோய்கள், குடிவயமை (alcoholism) | 3,000 µg | மிகை உயிர்ச்சத்து ஏ : கல்லீரல் பாதிப்பு, என்புச் சிதைவு, பிறப்புக் குறைபாடுகள் |
உயிர்ச்சத்து B1 | தயமின் | தானியவகை, அவரை வகை, பன்றி இறைச்சி, மதுவம்(yeast) | <0.3 mg/1000 kcal | பெரிபெரி, வேர்னிக் – கொர்சாகோவ் கூட்டறிகுறி | குடிவயமை, நீண்டகால சிறுநீர்ப்பெருக்கு மருந்துப் பயன்பாடு, வாந்தி மிகைப்பு | தூக்கக் கலக்கம், தசை தளர்வடைதல் | |
உயிர்ச்சத்து B2 | இரைபோஃபிளவின் | பால், இலை மரக்கறி, அவரை | <0.6 mg / நாள் | வாய்ப்புண், நாக்கு அழற்சி | – | ||
உயிர்ச்சத்து B3 | நியாசின், நியாசினமைட், நிக்கொட்டினிக் அமிலம் | இறைச்சி வகை, தானியவகை | <9.0 நியாசின் அலகுகள் | பெலகரா | குடிவயமை, உயிர்ச்சத்து B1, B2 குறைபாடு | 35.0 mg | கல்லீரல் பாதிப்பு (அளவு > 2g/நாள்) மற்றும் வேறு விளைவுகள் |
உயிர்ச்சத்து B5 | பன்டோதீனிக் அமிலம் | தானியவகை, அவரை வகை, முட்டை | (மிகவும் அரிது) வற்றுணர்வு (paraesthesia) | வயிற்றுப் போக்கு, குமட்டுதல் | |||
உயிர்ச்சத்து B6 | பிரிடொக்சின், பிரிடொக்சாமைன், பிரிடொக்சல் | இறைச்சி, மீன், உருளைக்கிழங்கு, வாழைப்பழம் | <0.2 mg | இரத்தச்சோகை, நரம்பியக்கக் கோளாறு | குடிவயமை, ஐசோனியாசிட் (கசநோய் மருந்து) | 100 mg | உணர்திறன் குறைபாடு, நரம்புக் கோளாறு |
உயிர்ச்சத்து B7 | பயோட்டின் | கல்லீரல், மதுவம், தானியங்கள், முட்டை மஞ்சள் கரு | சருமவழல், முடி கொட்டுதல் | வேகாத முட்டை வெள்ளைக் கருவில் காணப்படும் அவிடின் என்னும் புரதம் | |||
உயிர்ச்சத்து B9 | போலிக் அமிலம், போலேட் | கல்லீரல், இலை மரக்கறி, அவரை வகை | <100µg/நாள் | இரத்தச்சோகை, மன உளைச்சல், பிறப்புக் குறைபாடுகள் | குடிவயமை, சல்பாசலசின் (sulfasalazine), பைரிமெதாமைன் (pyrimethamine), | 1,000 µg | |
உயிர்ச்சத்து பி12 | சையனோ கோபாலமின் , ஐதரொக்சோ கோபாலமின், மெதயில் கோபாலமின்,அடினோசையில் கோபாலமின் | விலங்கு உணவு மூலங்களில் மட்டும் | <1.0µg/நாள் | மாமூலக்கல இரத்தச்சோகை (megaloblastic anemia), நரம்பியக்கக் கோளாறு | இரைப்பை நலிவு (உயிர் கொல்லி இரத்தச்சோகை – pernicious anaemia ), தாவர உணவு மட்டும் உட்கொள்ளல் | ||
உயிர்ச்சத்து சி | அசுகோர்பிக் அமிலம் | உடன் பழவகைகள் (தோடை இனம்), மரக்கறி | <10 mg/நாள் | இசுகேவி, காயம் குணமடையாமை | குடிவயமை, புகைப்பிடித்தல் | 2,000 mg | நெஞ்சு எரிதல், சிறுநீரகக் கல் |
உயிர்ச்சத்து டி | ஏர்கோகல்சிபெரோல், கொலிகல்சிபெரோல் | தோலில் சூரிய புற ஊதாக்கதிர்களால், பால், காளான், மீன் | <2.0 µg/நாள் | என்புருக்கி(Rickets), என்பு நலிவு நோய் (osteomalacia) | கொழுப்பு அகத்துறிஞ்சாமை,மூப்படைதல், சூரிய ஒளிப் பற்றாக்குறை | 50 µg | அதிகல்சியக்குருதி (hypercalcaemia) |
உயிர்ச்சத்து ஈ | இடொக்கோஃபெரோல், இடொக்கோ ட்ரையீனோல் | வித்து எண்ணெய், மரக்கறி | சுற்றயல் நரம்பியக்கக்கோளாறு, தள்ளாட்டம், இரத்தமுறிச் சோகை | கொழுப்பு அகத்துறிஞ்சாமை,உயிர்ச்சத்து E பரம்பரை நோய் | |||
உயிர்ச்சத்து கே | பச்சை நிற மரக்கறி, | <10µg/நாள் | இரத்தம் உறையாமை | கொழுப்பு அகத்துறிஞ்சாமை,கல்லீரல் நோய்கள், எதிருயிர்மிப் (antibiotic) பயன்பாடு |